விஜய் கன்னத்தில் விஜய் சேதுபதி கொடுத்த முத்த புகைப்படத்துடன் மாஸ்டர் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.! கொளுத்துடா வெடிய

நடிகர் விஜய் பிகில் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இது திரைப்படத்தில் விஜய் ஒரு கல்லூரிப் பேராசிரியர் கேரக்டரில் நடிக்கிறார் என தகவல் கிடைத்தது மேலும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனம் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார்கள்.

இவர்களுடன் இணைந்து ஆண்ட்ரியா, நடிகர் சாந்தனு, கௌரி கிஷன், ஆயர்கள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள், படத்தில் இருந்து அடுத்தடுத்து போஸ்டர்களை வெளியிட்டு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது படக்குழு. அதுமட்டுமில்லாமல் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று அனிருத் இசையில் விஜய்யின் சொந்த குரலில் பாடிய குட்டி ஸ்டோரி பாடலை வெளியிட்டது படக்குழு.

இந்த பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி யூடியூபில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியது. அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் திரைப்படத்தின் கலை இயக்குனர் சதீஷ் குமாரின் பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வெட்டி கொண்டாடினார்கள் படக்குழு, அப்பொழுது நடிகர் விஜய் சேதுபதி கலை இயக்குனர் சதீஷ்குமாருக்கு வாழ்த்து சொல்லி கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த விஜய் தனக்கும் முத்தம் வேண்டும் என கேட்க விஜய்சேதுபதி நடிகர் விஜய்க்கும் அன்பு முத்தமிட்டார், இந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியது, நெய்வேலியில் விஜய் ரசிகர்களுடன் செல்பி எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலானது போல, இந்த புகைப்படமும் வைரலாகும் என எதிர்பார்த்து காத்திருந்தார்கள் ரசிகர்கள்.

தற்பொழுது அந்த முத்தப் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது மேலும் விஜய் மற்றும் விஜய் சேதுபதி தொடர்பான காட்சிகள் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து இருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது. இதற்குமுன் லோகேஷ் கனகராஜ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Comment