விஜய் சேதுபதியை பொளந்து கட்டும் விஜய்.! வைரலாகும் மாஸ்டர் புகைப்படம்

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 13 ஆம் தேதி உலகம் முழுவதும் இந்த திரைப் படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் சஞ்சீவ், ஆண்ட்ரியா சாந்தனு பாக்கியராஜ், கௌரி கிஷன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில் படத்தின் ப்ரோமோ வீடியோவை கடந்த 5 நாட்களாக வெளியிட்டு வருகிறது படக்குழு, மேலும் சில புகைப்படங்களையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் மர்ம நபர்கள் மாஸ்டர் திரைப் படத்தின் சில காட்சிகளை இணைய தளத்தில் பதிவிட்டுளளார்கள் அதனால் படக்குழு பதறியது,  உடனே அந்த காட்சிகளை படக்குழு நீக்க அதிரடி உத்தரவு பிறப்பித்தது. காட்சிகள் வெளியான சில நிமிடங்களிலேயே அனைத்து காட்சிகளும் முடக்கப்பட்டது.

இந்த நிலையில் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க விஜய் மற்றும் விஜய் சேதுபதி சண்டை போடும் புகைப்படத்தை வெளியிட்டு எங்க சர்ப்ரைஸ் எப்படி இருக்கு என கேட்டுள்ளார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

master pongal

Leave a Comment

Exit mobile version