அட மாஸ்டர் பட பிரபலத்தை சின்ன குழந்தை நினைச்சிங்களா.! இவருக்கு கல்யாணம் ஆகி குழந்தை வேற இருக்காம்.! இவரின் மனைவி தான் திரவுபதி பட நடிகை

தமிழ் சினிமாவில் 2003ஆம் ஆண்டு வெளியாகிய ஆயுதம், திருடா திருடி ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் தான் உதய்ராஜ். ஆயுதம் திரைப்படத்தில் ஹீரோவாக டாப் நடிகர் பிரசாந்த் அவர்கள் நடித்திருந்தார்கள் அதேபோல் திருடா திருடி திரைப்படத்தில் தனுஷ் அவர்கள் நடித்திருந்தார்கள். இந்த இரண்டு திரைப்படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.

விஜயின் திருமலை திரைப்படத்திலும் உதய்ராஜ் நடித்திருந்தார் திருமலை திரைப்படத்தை ரமணா இயக்கினார் இந்த திரைப்படத்தில் தான் உதயராஜ் சிறிய கதாபாத்திரத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு வெளியாகிய பானா காத்தாடி என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் உதய்ராஜ் நடித்திருப்பார். பானா காத்தாடி திரைப் படத்தில் ஹீரோவாக அதர்வா நடித்திருப்பார் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார் அதர்வாவின் நண்பராக தான் உதய்ராஜ் நடித்திருந்தார்.

இப்படி ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த உதய்ராஜ் 2019ஆம் ஆண்டு வெளியாகிய கார்த்தியின் கைதி திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில் இவரின் கதாபாத்திரம் மக்களால் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. சமீபத்தில்தான் இவர் சமூக வலைதள பக்கத்தில் தலை காட்டியுள்ளார்.

master actor
master actor

முதன் முதலாக இவர் தளபதி விஜய் பற்றி ஸ்டேட்டஸ் வைத்திருந்தார் இவர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்திருந்தார் உதய் அவர்களை சின்ன பையன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை வேறு இருக்கிறது. அதுவும் இவரது மனைவி தான் திரவுபதி படத்தில் நடித்த நடிகை என்பது பலருக்கும் தெரியாத விஷயம். திரவுபதி திரைப்படத்தில்  நாயகியின் தங்கையாக  ஜனனி என்பவர் நடித்திருப்பார் அவரை தான் இவர் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

master actor
master actor

Leave a Comment