ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மாஸ்டர் டிரைலர் தேதி அறிவிப்பு.! இந்த முறை மிஸ் ஆகாது!.

0

master trailer release date:தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அதுமட்டுமில்லாமல் வசூல் மன்னனாக வலம் வருகிறார். சமீபத்தில் இவரின் திரைப்படங்கள் கோடிக்கணக்கில் வசூல் குவித்து வருகின்றன, அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்பவர்களில் இவரும் ஒருவர். அதேபோல விஜய்க்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை யாராலும் கணிக்க முடியாது.

இந்த நிலையில் தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். மேலும் ஆண்ட்ரியா, கௌரி கிஷன், சாந்தனு பாக்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

விஜய் சினிமா பயணத்திலேயே இதுவரை அவரின் திரைப்படம் வெளியாகாமல் தடுமாறியது கிடையாது எவ்வளவு தடைகள் வந்தாலும் திரைப்படம் ரிலீஸ் ஆகிவிடும், பல பிரச்சனைகள் வந்தப்ப கூட திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது கிடையாது, இந்த கொரோனாவால் முதல் முறையாக விஜயின் திரைப்படம் ரிலீசாகாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

மாஸ்டர் திரைப்படம் எப்பொழுது வெளியாகும் என ரசிகர்களை காக்க வைத்து விட்டார்கள். அதற்கு காரணம் சூழ்நிலைதான் விஜய்க்கு, விஜய்சேதுபதி வில்லனாக நடித்து உள்ளதை காண பல ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். மேலும் அனிருத் இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் மிரட்டலாக வந்துள்ளதால் பாடலைக் காண விஜய் ரசிகர்கள் ஏங்கிக்கொண்டிருக்கும் நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் விரைவில் திரையரங்குகள் திறக்கப்பட இருக்கின்றன. அதனால் மாஸ்டர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்பது 90%  உறுதியாகியுள்ளதாக கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தீபாவளிக்கு முன்னதாகவே மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

அதனால அக்டோபர் 25 ஆயுத பூஜை அன்று மாஸ்டர் டிரைலரை வெளியிட போவதாக தெரிகிறது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் கொண்டாடுவதற்கு தயாராகி வருகிறார்கள் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது.