இணையதளத்தில் லீக் ஆன மாஸ்டர் பாடல் லிஸ்ட் எத்தனை பாடல் உள்ளது தெரியுமா

தளபதி விஜய் பிகில் திரைப்படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் விஜயின் 64வது திரைப்படமாகும் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் மற்றும்  விஜய்சேதுபதி வில்லனாகவும் நடித்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு டெல்லி மற்றும் சென்னையில் நடைபெற்ற நிலையில் தற்போது கர்நாடகாவில் உள்ள சிறைச்சாலையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியிருக்கின்றன. மேலும் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாஸ்டர் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடம்  நல்ல வரவேற்பு பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இந்த நிலையில்  திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் பற்றி தகவல் லீக் ஆகியுள்ளது. மேலும் கூகுள் தேடலில் தளபதி 64 சாங்ஸ் என டைப் செய்தால் படத்தில் உள்ள பாடல்கள் லிஸ்ட் தகவல் காண்பிக்கிறது.

thalapathy 64
thalapathy 64

அதில் டைட்டில் டிராக் மற்றும் ‘உடம்புல ஃபுல்லா திமிரு’ என்ற இரண்டு பாடல்களையும் அனிருத் பாடியுள்ளார். ‘வா வா என் எதிரில்’ பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், ‘இங்க நான்’ பாடலை ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து சித் ஸ்ரீராம் பாடி இருப்பதாக அதில் உள்ளது. தளபதி கோட்டையில் பாடலை அந்தோணி தாஸ் பாடியுள்ள நிலையில் நான் வந்தா பட்டாசு வெடிக்கும் பாடலை நாகேஷ் அஸிஸ் பாடியுள்ளார். மொத்தம் அந்த லிஸ்டில் 10 பாடல்கள் உள்ளன.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment