நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பு.! சமூக வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ.!

தளபதி விஜய் பிகில் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருவதால் விரைவில் படப்பிடிப்பு முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக தொடங்கியிருக்கிறார்கள்.

இந்தநிலையில் நெய்வேலியில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன, மேலும் நெய்வேலியில் நடந்து கொண்டிருக்கும் படப்பிடிப்பு தளத்திலிருந்து வீடியோ ஒன்று சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதற்கு முன் சில வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களிடம் வைரல் ஆன நிலையில் தற்பொழுது இந்த வீடியோவும் வைரலாகி வருகிறது. மாஸ்டர் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

https://twitter.com/Prabhaharish_07/status/1224599963566391296

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment