விஜயின் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து வெளிவந்த சீக்ரட்! வீடியோ இதோ…

தளபதி விஜய் எப்பொழுதும் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் வகையிலான திரைப் படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது வழக்கம்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து அப்படி ஒரு சிறப்பான திரைப்படம் தான் மாஸ்டர்.

இத்திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியாகி தற்போது வரையிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தப் படத்தில் வழக்கம்போல விஜய் இளமையாகக் காட்டி ரசிகர்களுக்கும் மக்களுக்கும் விருந்து படைத்தனர்.

விஜய் பெரும்பாலும் படங்களில் காமெடி மற்றும் தனது குறும்புத்தனத்தை படங்களில் காட்டுவது வழக்கம் இந்த படத்தில் காமெடி கொஞ்சம் கம்மியாக இருந்தாலும்விறுவிறுப்பும், குறும்புத்தனமும் இருந்ததால் படம் அனைவரது மத்தியிலும் ரசிக்கும்படி அமைந்தது.

மேலும் இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஒவ்வொன்றும் மிகப்பெரிய ஹிட்டடித்தது அதிலும் குறிப்பாக வாத்தி கம்மிங் பாடல் வேற லெவல் பிரபலமடைந்து தற்போது உலக அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.

தளபதி விஜய் வாத்தி கம்மிங் பாடலுக்கு லைட்டாக பேண்டை அட்ஜஸ்ட் செய்து மாட்டிக்கொண்டு நடன அசைவு கொடுப்பார் ஆனால் அந்த அசைவு இதற்கு முன்பாக அவரது திரைப்படமான குஷி படத்திலும் செய்து காட்டிய காட்சி தற்போது இணையதளத்தில் படுவேகமாக பரவி வருகின்றன. அந்த காட்சியை நீங்களே பாருங்கள்.

https://twitter.com/iTz_TFB/status/1359031931938115587?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1359031931938115587%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.cineulagam.com%2Factors%2F06%2F190109

Leave a Comment