விஜய்க்கு காத்துக்கொண்டிருக்கும் அடுத்தடுத்து இரண்டு ஆப்புகள் இதை எப்படி தான் சமாளிக்க போறாரோ.

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் விஜயுடன் விஜய் சேதுபதி மற்றும் ஆண்ட்ரியா சாந்தனு, கௌரி கிஷன், அருண் தாஸ்,, விஜய் ரம்யா, தீனா, ஸ்ரீமன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் டப்பிங் பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. படத்தை வரும் ஏப்ரல் 9ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு எடுத்துள்ளது.

இந்தநிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் சமீபத்தில் வெளியாகிய வாத்தி கம்மிங் பாடல் சமூக வலைதளத்தில் உலக அளவில் ஏழாவது இடம் பிடித்தது. இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரபல நட்சத்திர ஹோட்டலில் வருகின்ற 15ஆம் தேதி நடத்த இருக்கிறார்கள்.

ஆனால் இந்த முறை ரசிகர்கள் யாரும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள முடியாது, ஆனால் அவர்களுக்காக சன் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்துள்ளார்கள். எப்போது விஜய் திரைப்படம் ரிலீஸ் ஆனாலும் ஏதாவது ஒரு சர்ச்சை வெளியாகி படத்திற்கு பிரமோஷன் கிடைத்துவிடுகிறது.

ஆனால் இந்த முறை வேற லெவல் சர்ச்சை எழுந்துள்ளது, படத்திற்கு 10 சதவீத டிடிஎஸ் வரியை ரத்து செய்யாவிட்டால், மார்ச் 27 முதல் புதிய படங்களை வினியோகிக்க மாட்டோம் என விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் டி ராஜேந்தர் அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் 9ம் தேதி மாஸ்டர் திரைப்படத்தை வெளியிட இருக்கிறார்கள். ஆனால் இந்த போராட்டம் ஏப்ரல் 9ஆம் தேதி வரை நீடித்தால் மாஸ்டர் படத்தின் ரிலீஸுக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்படும் எனக் கூறப்படுகிறது.

ஒருவேளை போராட்டம் எதுவும் நடக்காமல் வாபஸ் பெறப்பட்டு விட்டால் சொன்ன தேதிக்கு ரிலீஸ் ஆனாலும் கொரோனா நோய் என்ற அச்சத்தில் இருந்து தப்பிக்க வேண்டும். ஏனென்றால் உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா தற்பொழுது தமிழ்நாட்டிலும் பரவத் தொடங்கிவிட்டது, கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் ஒன்றாக கூடுவதை தவிர்க்க வேண்டும் என இந்திய அரசு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.

அதனால்தான் மாஸ்டர் திரைப்படத்தின் ஆடியோ ரிலீஸ் ரசிகர்கள் இல்லாமல் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, அதுமட்டுமில்லாமல் காரணம் வைரஸ் முன்னெச்சரிக்கையாக கேரளாவில் 31ம் தேதி வரை திரையரங்குகள் மூடப்படும் என திரையரங்க உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Comment