மரண பீதியில் மாஸ்டர் படம் ரிலீஸ் ஆனாலே கோடிக்கணக்கில் நஷ்டம் ஆகுமா.

கைதி திரைப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார், இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதியும், ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் ஆண்ட்ரியா, சாந்தனு, ஸ்ரீமன் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், போஸ்டர் அனைத்தும் ரசிகர்களிடம் உயரிய நிலையில் குட்டி ஸ்டோரி பாடலும் ரசிகர்களை கொண்டாட வைத்தது, அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது, ஆனால் இந்த இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் கலந்து கொள்ள முடியவில்லை என்பது வருத்தம் தான்.

இந்தநிலையில் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகாது என கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் இசை வெளியீட்டு விழாவிற்கு முன் விநியோகஸ்தர்களின் சந்திப்பின்போது ஒன்பதாம் தேதி இந்த படத்தை வெளிநாடுகளில் வெளியிட முடியாது என எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் 9-ஆம் தேதி படத்தை வெளியிடவில்லை என்றால் தனக்கு மிகப் பெரிய பண நெருக்கடி ஏற்படும் என கூறி உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் மாஸ்டர் படத்தை நம்பி பல இடங்களில் கடன் வாங்கி மொத்த செட்டில் மண்டையும் முடித்து விட்டதாக தெரிவித்தார், இப்படியிருக்க இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் மார்ச் 31ம் தேதி வரை திரையரங்குகள் மற்றும் மால்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலை மாறி மீண்டும் பழைய நிலைக்கு மாறினால் தியேட்டர், மால்கள், பள்ளிக்கூடங்கள் திறக்க வாய்ப்பு இருக்கிறது.

இப்படியிருக்க மாஸ்டர் திரைப்படம் சொன்ன தேதிக்கு வெளியாவதில் பெரும் சிக்கல் இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது, இதனை தெரிந்துகொண்ட தளபதி ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் இருக்கிறார்கள், ஆனாலும் மக்கள் நலன் கருதி இப்படி நாட்டுக்கு பிரச்சனையாக இருப்பதால் இதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்பது ரசிகர்களின் சூழ்நிலை.

அப்படியே இயல்பு நிலை திரும்பினாலும் மெயின் இடங்கலில் 11ஆம் தேதி வரை திரையரங்குகள் மூடி இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள், மோசமான சூழ்நிலையால் மாஸ்டர் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, மீறி வெளியிட்டால் கோடிக்கணக்கில் பணம் நஷ்டம் அடைய வாய்ப்பு உள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் கூறுகிறார்கள். அதனால், தமிழகத்திலும் மாஸ்டர் திரைப்படம் வெளிவருவதை தற்காலிகமாக நிறுத்திவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment