மாஸ்டர் திரைப்படத்தின் Quit pannuda லிரிக் பாடல் வீடியோ!! பட்டைய கிளப்பும் பாடல். !! வைரலாகும் வீடியோ.

0

master movie quit pannuda lyric video:லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் மாளவிகா மோகனன் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் மாஸ்டர். மேலும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் ஆகும் நிலையில் இருந்தது.

ஆனால் கொரோனா லாக்டவுன் காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாத காரணத்தால் படம் ரிலீசாவது தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. மேலும் தயாரிப்பாளர் இந்த திரைப்படத்தை ஓடிடி தளத்தில்  ரிலீஸ் செய்யலாம் என கூறினார் ஆனால் அதற்கு விஜய் மறுத்துவிட்டார்.

மேலும் திரைப்படத்திலிருந்து வாத்தி கம்மிங் என்ற பாடல் இணையதளத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் உலகம் முழுவதும் ட்ரெண்டிங் ஆனது. மேலும் அதனை தொடர்ந்து அனிருத் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த குவிட் பண்ணுடா என்ற பாடல் லிரிக் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த பாடலை லோகேஷ் கனகராஜ் அவர்கள் எழுதி அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, இதோ அந்தப் பாடல் லிரிக் வீடியோ.