என்ன நண்பா ரெடியா காதலர் தினத்தில் காதலர்களுக்கு மாஸ்டர் படக்குழு கொடுக்கும் சர்ப்ரைஸ். இதோ மாசான அதிகாரபூர்வ அறிவிப்பு.

தளபதி விஜய் தற்போது இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வந்தன சமீபத்தில் படப்பிடிப்பை நெய்வேலியில் மற்றும் அதன் சுற்றுப் புறங்களிலும் நடைபெற்று வந்தது.

இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் நெய்வேலியில் சூட்டிங் நடைபெற்று முடிந்த நிலையில் விஜய் ரசிகர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார் அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இந்த நிலையில் படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது, இந்த நிலையில் மாஸ்டர் சிங்கிள் டிராக் விரைவில் வெளியாக இருப்பதாக அவர்கள் அதிகாரபூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளார்கள்.

மேலும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒரு குட்டி கதை சொல்லட்டுமா எனக்கூறி மாஸ்டர் சிங்கிள் ட்ராக் பிப்ரவரி 14 அதாவது காதலர் தினம் அன்று மாலை ஐந்து மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.

Leave a Comment