மாஸ்டர் முதல் சண்டைக்காட்சி எங்கு தெரியுமா.? விஜய்யே வியந்து பார்த்தார் எக்ஸ்க்ளுசிவ் அப்டேட் இதோ.!

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படத்தின் post-production பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன, படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும்  நடித்துள்ளார்.

இதனால் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள், இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய வசனங்கள் அனைத்தும் இணையதளங்களில் ஹிட்டடித்தது அதுமட்டுமில்லாமல், நமது நண்பர் அஜித் போல் எனக் கூறி மேடையை அதிர வைத்தார் விஜய்.

இந்த நிலையில் படத்தை வருகிற 9ம் தேதிக்கு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது, ஆனால் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் திரையரங்கங்கள்  மூடப்பட்டுள்ள நிலை ஏற்பட்டுள்ளது அதனால் வருகின்ற ஏப்ரல் 9ஆம் தேதி படம் வெளியாவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது ஆனால் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்து விட்டாள் குறித்த நாளில் படம் வெளியாகும் என படக்குழு அடித்துக் கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் ஒரு கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார், திரைப்படத்தில் விஜய்யின் ஐடி கார்ட் இணைய தளத்தில் வெளியாகி வைரல் ஆனது அதில் விஜய்யின் பெயர் ஜான் துரைராஜ் என குறிப்பிட்டிருந்தது.

இந்த  திரைப்படத்தில் விஜயனுடன் இணைந்து யூடியூப் பிரபலங்கள் பலரும் கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளார்கள், இந்தப் படத்தில் இரண்டு கேங்க் இருக்கிறதாம் அதில் ஒரு கேங் கில் இருப்பவர் பிரவீன்குமார், இந்த இரண்டு கேங்கிர்க்கும் இடையே ஒரு சண்டைக்காட்சி இருக்கிறது, இந்த சண்டைக்காட்சி மெட்ரோ ரயிலில் எடுத்துள்ளார்கலாம் அதற்காக மெட்ரோ ரயிலை 3 மணி நேரம் வாடகைக்கு எடுத்து இந்த காட்சி எடுக்கப்பட்டது.

இந்த காட்சி தான் படத்திலுள்ள முதல் சண்டை காட்சி என பிரவீன்குமார் கூறியுள்ளார், மேலும் பிரவீன்குமார் கூறியதாவது விஜய் இதுவரை மெட்ரோ ரயிலில் சென்றதே இல்லையாம் அதனால் குழந்தை போல் மெட்ரோ ரயிலில் நடந்து கொண்டே இருந்தாராம் பிறகு சென்னை மிகவும் அழகாக இருக்கிறது என கூறி கொண்டே இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

Leave a Comment