அட நம்ம விஜய் மாஸ்டர் படத்தில் இந்த காட்சியை அவரே இயக்கியுள்ளார் தெரியுமா.? அதுவும் இப்படிப்பட்ட காட்சியை.!

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் ஸ்ரீமன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், நாசர், சாந்தனு ஆகியோர்களும் நடித்துள்ளார்கள்.

சமீபத்தில்தான் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது, இந்த நிலையில் தற்போது படத்தின் டப்பிங் வேலைகளும், புரமோஷன் வேலைகளும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது படத்தை வருகின்ற ஏப்ரல் 9ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகின்ற 15ஆம் தேதி சன் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என படத்தை தயாரிக்கும் சன் பிக்சர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தநிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு காட்சியை நடிகர் விஜய் இயக்கி உள்ளார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஆடை திரைப்படத்தின் இயக்குனர் ரத்தினகுமார் கௌரவ தோற்றத்தில் தோன்றும் சில நிமிட காட்சிகளை தான் நடிகர் விஜய்யை இயக்கி உள்ளாராம் இந்த தகவல் தற்பொழுது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

Leave a Comment