விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் சிறுவயது விஜய்சேதுபதியாக யார் நடித்துள்ளார் தெரியுமா.? சுவாரஸ்யமான தகவல் இதோ.

முன்னணி நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் வழக்கம்போல் குட்டி ஸ்டோரி சொன்னார்.

அந்த ஸ்டோரி ரசிகர்களிடம் வைரலானது. அதுமட்டுமில்லாமல், இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார், படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி வருகிறது.

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் டீஸர் வருகின்ற மார்ச் மாதம் 22ஆம் தேதி வெளியாகும் என ஒரு தகவல் கசிந்துள்ளது. அதனால், இதன் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள், மேலும் இந்த திரைப்படத்தில் இளம் நடிகர்கள் பலர் நடித்துள்ளார்கள். அவர்களுக்கு வாய்ப்பு வழங்கியது இயக்குனர் லோகேஷ் தான்.

பல இளம் நடிகர்களில் ஒருவர் நடிகர் மகேந்திரன் ஆவர், இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டுள்ளார். அப்பொழுது மாஸ்டர் திரைப்படத்தை பற்றி பல சுவாரஸ்யமான தகவலை பேட்டியில் பகிர்ந்துள்ளார், அந்தப் பேட்டியில் மாஸ்டர் திரைப்படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியாக நீங்க தான் நடித்துள்ளீர்களா என கேள்வி கேட்கப்பட்டது.

மகேந்திரன் சிரித்துக்கொண்டே அதைப்பற்றி என்னால் இப்பொழுது வெளியில் சொல்ல முடியாது, ஆனால் இந்த திரைப்படம் எனக்கும் சாந்தனுவிற்கும் மிக முக்கிய படமாக அமைந்துள்ளது என கூறியுள்ளார்.

Leave a Comment