மாஸ்டர் திரைப்படத்தில் சிறுவயது விஜய் சேதுபதி யாக நடித்தது யார் தெரியுமா? ஆமா அவரேதான் நீங்க நினைச்சவர்தான்

Master movie child vijay sethupathi : தளபதி விஜய் தமிழ் சினிமாவே கொண்டாடப்படும் நடிகர், இவர்  வசூல் மன்னனாக வலம் வருகிறார். இந்நிலையில் விஜய் பிகில் திரைப்படத்தை தொடர்ந்து மாஸ்டர் திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மாளவிகா மோகனன் விஜய் சேதுபதி மாஸ்டர் மகேந்திரன் சாந்தனு பாக்கியராஜ், கௌரி கிஷன் ஆண்ட்ரியா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ரிலீசாக வேண்டியது.

ஆனால் இந்த கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போய் கொண்டே போகிறது. மேலும் படத்தின் ரிலீஸ் தேதி நாளுக்கு நாள் தள்ளிப் போய்க் கொண்டே போவதால் யாராவது படத்தை இணையதளத்தில் வெளியிட்டு விடுவார்கள் என்ற பயம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டை பிரபல யூடியூப் இணையதளம் வெளியிட்டுள்ளது, மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்துள்ளது அனைவருக்கும் தெரியும் ஆனால் சிறுவயது விஜய் சேதுபதியாகா பிளாஷ்பேக் காட்சிகளில் யார் நடித்து உள்ளார்கள் என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.

சிறுவயது விஜய் சேதுபதியாக  மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ளாராம், அதிலும் மாஸ்டர் மகேந்திரனுக்கு விஜய் சேதுபதிதான் டப்பிங் பேசியுள்ளார் ஆம் இது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது. மாஸ்டர் மகேந்திரன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார் என அனைவருக்கும் தெரியும் ஆனால் பல நடிகர்களின் கதாபாத்திரம் என்ன என்பது இணைய தளத்தில் வெளிவந்த நேரத்தில் இவரின் கதாபாத்திரம் சர்ப்ரைசாக இருந்தது.

சர்ப்ரைஸ் இரசிகர்களுக்கு படத்தில் காட்டலாம் என லோகேஷ் கனகராஜ் எண்ணிக் கொண்டிருந்தார் ஆனால் அவர் ஆசையில் மண் விழுந்தது தற்போது மாஸ்டர் மகேந்திரனின் கதாபாத்திரம் இணைய தளத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது.

Leave a Comment