இயக்குனர் லோக்கேஷ் கனகராஜ் கைதி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் உடன் கூட்டணி அமைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தை எடுத்து இருந்தார் இந்த திரைப்படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது இதில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பு வேற லெவலில் இருந்தது.
இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் பல்வேறு நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்திருந்தாலும் பெரும்பாலும் அவர்களுக்கு கொஞ்சம் டம்மியான ரோல்கள்தான் கிடைத்தன அதிலும் குறிப்பாக விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் பள்ளி ஆசிரியையாக நடித்திருந்தாலும் மிகப் பெரிய அளவு கதாபாத்திரம் இல்லாமல் சும்மா அப்பப்ப வந்து போவதுமாக தான் இந்த படத்தில் இருந்தார்.
வழக்கம் போல டாப் நடிகர்கள் படத்தில் ஹீரோயினுக்கு டம்மி ரோல்தான் கொடுப்பார்கள் அதுபோல இந்த படத்திலேயும் மாளவிகாவுக்கு கொடுத்துவிட்டனர்.மேலும் இந்த படத்தில் மாளவிகா அவரது சொந்த குரலில் பேசவில்லையாம் அதுவும் வேறு ஒருவரை வைத்து தானாம்.
மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனனுக்கு குரல் கொடுத்தவர் வேறுயாருமல்ல சின்னத்திரையில் ஒளிபரப்பாகிக் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்த தனம் தான் நடிகை மாளவிகா மோகனனுக்கு குரல் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது.
தனத்தின் உண்மையான பெயர் சுஜிதா இவருக்கு இப்படி ஒரு திறமையா என பலரும் தற்பொழுது கூறி வருகின்றனர்.