மாஸ்டர் 50வது நாளில் ரசிகர்களுக்கு கிடைத்த மாஸானா வீடியோ.! விஜய்யை முறைக்கும் விஜய்சேதுபதி.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படம் பொங்கல் தின சிறப்பு திரைப்படமாக வெளியிடப்பட்டது. வெறும் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்கிற்கு வந்த இந்த திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்தது  அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

பல தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் 50 சதவீத இருக்கைகளுடன் படத்தை ரிலீஸ் செய்ய தயங்கினார்கள்.  அதனால் மாஸ்டர் படக்குழு என்ன நடந்தாலும் பரவாயில்லை என திரையரங்கில் ரிலீஸ் செய்தார்கள் கூட்டம் அலைமோதியது.

படமும் மாபெரும் வெற்றியடைந்தது, இந்த நிலையில் படம் வெளியாகி 16 நாட்கள் ஆன நிலையில் OTT இணையதளத்தில் வெளியிடப்பட்டது. OTT இணைய தளத்தில் வெளியிட்டாலும் திரையரங்கிலும் படம் சக்கை போடு போட்டது. இரண்டிலும் வசூல் கல்லா கட்டியது.

லாக் டவுனுக்குப் பிறகு ஒரு திரைப்படம் 50 நாள் ஓடியுள்ளது என்றால் அது மாஸ்டர் திரைப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாஸ்டர் திரைப்படம் 50 நாள்  விழாவை விஜய் ரசிகர்கள்  கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள் அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி மோதும் கிளைமாக்ஸ் காட்சிகள் படப்பிடிப்பு நடைபெற்ற பொழுது எடுக்கப்பட்டது. இந்த மாஸ் காட்சி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

இதோ வீடியோ.

Leave a Comment