கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 5 யில்நடிக்கிறாரா ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த மாஸ்டர் மகேந்திரன்

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய டாப் ஜாம்பவான்கள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக வலம் வந்தவர் மாஸ்டர் மகேந்திரன்.

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வந்தாலும் தனக்கான அங்கீகாரத்தை பிடிக்க முடியாமல் போராடிக்கொண்டிருந்த மகேந்திரன் தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் வில்லனாக நடித்து தனது திறமையை வெளிக்காட்டினார்.

படத்தில் இவரது நடிப்பு வேற லெவெலில் இருந்ததால் தற்போது பட வாய்ப்புகளை இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தேடி வந்து அள்ளி கொடுகின்றனர் அந்த வகையில் தற்போது பல்வேறு திரைப்படங்களில் வில்லனாகவும் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் இப்படி வெற்றியை நோக்கி தற்போது ஓடிக் கொண்டிருக்கும் மகேந்திரனுக்கு ரசிகர்கள் கூட தற்போது ஏராளமாக வளர தொடங்கி உள்ளனர்.

இந்தநிலையில் மாஸ்டர் மகேந்திரனை சமூக வலைதள பக்கத்தில் தொடர்புகொண்டு ரசிகர் ஒருவர் நீங்கள் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 5 இல் கலந்துகொள்ள உள்ளீர்களா என கேட்டதற்கு அவர் கூறுகையில் மாஸ்டர் மகேந்திரன் வாழ்க்கையே ஒரு பிக் பாஸ் தான் என நறுக்கென்று ஒரு பதிலளித்தார்.

Leave a Comment

Exit mobile version