இந்த இயக்குனர் மட்டும் இல்லை என்றால் என் வாழ்க்கையே அதோகதிதான்.! தொடர்ந்து 16 திரைப்படங்கள் வாய்ப்பு கொடுத்தார்.! குட்டி பவானி உருக்கம்

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மிகவும் பிரபலம் அடைந்தவர் மாஸ்டர் மகேந்திரன் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகிய நாட்டாமை திரைப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன் நடிப்பு மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. அதிலும் வில்லன் நடிகர் ஒருவர் ஒரு பெண்ணை  பம்ப் செட்டில் வைத்து நாசம் செய்து விடுவார் அப்பொழுது பஞ்சாயத்தில் மாஸ்டர் மகேந்திரன் நான் பார்த்தேன் அந்த அக்கா அழுது கொண்டே வந்தாங்க என பஞ்சாயத்தில் மாஸ்டர் மகேந்திரன் கூறுவார்.

அவர் அப்பொழுது சிறுவயதில் நடித்து வந்ததால் அவரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது.  அன்றிலிருந்து இன்றுவரை மாஸ்டராக மகேந்திரனுக்கு  மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.  மாஸ்டர் மகேந்திரன் அவர்களுக்கு ஜிம்னாஸ்டிக், பைட்,  சிலம்பாட்டம், டான்ஸ், ஸ்கேட்டிங், ஸ்விம்மிங், ஹாஸ்ட் ரெயிடிங் பரதநாட்டியம், சிங்கிங் என பல திறமைகளை வெளிக்காட்டியது தான் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகிறது..

ks-ravikumar
ks-ravikumar

அந்தவகையில் கேஎஸ் ரவிக்குமார் மாஸ்டர் மகேந்திரன் அவர்களுக்கு தொடர்ந்து 16 படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பதற்கு வாய்ப்பு தந்ததாக உருக்கத்துடன் மாஸ்டர் மகேந்திரன் கூறியுள்ளார். குழந்தை நட்சத்திரமாக பல திரைப்படங்களில் நடித்துள்ள மாஸ்டர் மகேந்திரன் ஒரு வயதுக்கு மேல் பட வாய்ப்புக்காக ரோடு ரோடாக தேடி அலைந்து அழுத காலமும் உண்டு.

அதன்பிறகு மாஸ்டர் மகேந்திரன் 2013ம் ஆண்டு ஹீரோவாக விழா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு இவருக்கு பெயரை பெற்றுக் கொடுக்கவில்லை அதன்பிறகு விஜயுடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்ததன் பிறகு தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தது.

ஏனென்றால் மாஸ்டர் திரைப்படத்தில் குட்டி பவனியாக அசால்ட்டா நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்த நிலையில் மாஸ்டர் மகேந்திரன் அவர்களுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment