தளபதி 64 மாஸ்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இதை கவனித்தீர்களா.! செம மாஸ் தகவல் இதோ.!

தளபதி விஜய் திரைப்படத்திற்கு எப்பொழுதும் உலகம் முழுவதும் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும், இந்த நிலையில் தளபதி 64 திரைப்படத்திற்கு மாஸ்டர் என பெயர் வைத்துள்ளார்கள், இந்த திரைப்படத்தை கைதி திரைப்படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் தான் இயக்கி வருகிறார், படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது இந்த டைட்டிலை வைத்து பார்க்கும்பொழுது விஜய் கண்டிப்பாக கல்லூரி ஆசிரியராக நடித்து வருவது உறுதியாகியுள்ளது, இந்த படத்தின் டைட்டில் மாஸ்டர் என வைத்துள்ளார்கள்.

இந்தநிலையில் மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய்யின் புகைப்படம் ப்லராக காட்டப்பட்டுள்ளது, அதனால் படத்தில் போதைப் பொருள்கள் உள்ளிட்ட விஷயங்கள் இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்னுள்ள திரைப்படத்திலும் இதே கதை களம் தான் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த போஸ்டரை வைத்து பார்க்கும்பொழுது படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்பதை குறிப்பிட்டுள்ளனர், அதனால் தமிழ் புத்தாண்டு மாஸ்டர் படத்தை  எதிர்பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ படத்தின் ரிலீஸ் தேதி படக்குழு வெளியிட்டால் மட்டுமே உறுதியாக கூற முடியும். எனவே பர்ஸ்ட் லுக் போஸ்டரை கொண்டாடலாம்.

thalapthy-64-is-master
thalapthy-64-is-master

Leave a Comment