ப்பா என்ன ஒரு அடி.! இணையதளத்தில் வைரலாகும் மாஸ்டர் சண்டை காட்சி.! வெறித்தனமாக அடிக்கும் விஜய் வைரலாகும் வீடியோ.

நடிகர் விஜய் பிகில் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக கைதி திரைப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துவருகிறார் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துவருகிறார். அதுமட்டுமில்லாமல் விஜய்சேதுபதி வில்லனாகவும் நடித்து வருகிறார்.

இவர்களுடன் இணைந்து நடிகர் சாந்தனு, ஆண்ட்ரியா ஆகியோர்கள் நடித்துவருகிறார்கள் அனிருத் இசையில் உருவாகும் இந்த திரைப்படத்தை எக்ஸ்பி கிரியேட்டர் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த திரைப்படத்தை வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியிட இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

மேலும் மாஸ்டர் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.முதல் இரண்டு போஸ்டர்களில் விஜய் இடம்பெற்றிருந்த நிலையில் மூன்றாவது போஸ்டரில் விஜய் சேதுபதியும் விஜயும் ஆக்ரோஷமாக பார்த்துக்கொள்ளும் புகைப்படம் வெளியானது இதனால் ரசிகர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து.

இந்த நிலையில் மாஸ்டர்  திரைப்படத்தின் வீடியோ இணையதளத்தில் லீக் ஆகி வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில் விஜய் ரவுடி ஒருவரை பெரிய இரும்பு ராடல் அடிக்கிறார் இந்த காட்சிதான் அது. இதைப் பார்த்த ரசிகர்கள் என்ன ஒரு அடி என வாயை பிளக்கிறார்கள். இதோ அந்த வீடியோ.

Leave a Comment