விஜய்சேதுபதி தொகுத்து வழங்கிய “மாஸ்டர் செஃப்” முடிந்தது.! முதலிடத்தை பிடித்த தேவகி.. வாங்கிய மொத்த தொகை எவ்வளவு தெரியுமா.? வெளியான நிலவரம்.

சின்னத்திரையில் புதிய புதிய நிகழ்ச்சிகள் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்களை தன் பக்கம் இழுக்கிறது அந்த வகையில் சன் டிவி தொலைக்காட்சி சீரியல்களையும் தாண்டி வித்தியாசமான நிகழ்ச்சிகளை கொடுத்து வருகிறது அந்த வகையில் சமீபத்தில் கூட நடிகர் விஜய் சேதுபதி மாஸ்டர் செஃப் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்ச்சி உலக அளவில் ஏற்கனவே பிரபலப்படுத்த பட்டிருந்தாலும் தமிழில் இதுவரை பெரிய அளவில் வராமல் இருந்து வந்த நிலையில் அதை சன் டிவி சமீபத்தில் கொண்டுவந்து அசத்தியது மேலும் விஜய் சேதுபதி கோலாகலமாக தொகுத்து வழங்கினார்.

மாஸ்டர் செஃப் நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. இதில் மொத்தம் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இது மக்களுக்கு ஆரம்பத்திலேயே பிடித்துக்கொண்டு  நிகழ்ச்சியாக மாறியது. இதில் மொத்தம் 14 போட்டியாளர்கள் இருந்தாலும் 10 பேர் எலிமினேஷன் ரவுண்டில் வெளியேறினர்.

கடைசி நான்கு இடங்களில் இருந்த போட்டியாளர்கள் இறுதிகட்டத்தில் மோதினர். இறுதிப் போட்டி நவம்பர் 13,  14 ஆகிய தேதிகளில் நடந்தன. முதல் நான்கு இடத்தை பிடித்த தேவகி, வினித், கிருத்திகா, நந்தியா ஆகியோர் போட்டியிட்டனர் இதில் சிறப்பான சாப்பாட்டை செய்து தேவகி முதல் இடத்தை பிடித்தார்.

இவர் இறுதி போட்டியில் 60 க்கு 54 மதிப்பெண்கள் பெற்று அசத்தினார் முதலிடத்தை பிடித்த இவருக்கு வாழ்த்துகள் குவிந்த தோடு மட்டுமல்லாமல் பரிசுத் தொகையாக ரூ 25 லட்சம் கொடுக்கப்பட்டது மேலும் ஷீல்டும் வழங்கப்பட்டது. இதனால் தேவகி தற்போது செம உற்சாகத்தில் இருக்கிறார். பல பிரபலங்களும், மக்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment