மாஸ்டர் இசைவெளியிட்டு விழாவில் அஜித் பற்றி பேசி அரங்கத்தை அதிரவிட்ட விஜய்.! வைரலாகும் வீடியோ

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது, இசை வெளியீட்டு விழாவில் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது விஜய் ஏதாவது குட்டி ஸ்டோரி சொல்வார் என்று தான், அதேபோல் நேற்று இசை வெளியீட்டு விழாவில் விஜய் ஒரு குட்டி ஸ்டோரிஸ் கூறினார். அரங்கமே கைதட்டியது.

இதனைத்தொடர்ந்து விஜய் பேசி முடித்ததும் தொகுப்பாளர்கள் இருவரும் வந்து விஜய்க்கு கை கொடுத்தார்கள் அதனை தொடர்ந்து விஜய் கோட்சூட் அழகாக இருக்கிறது எனக் கூறினார்கள், அதற்கு காரணம் காஸ்ட்யூம் டிசைனர் தான் என விஜய் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் நண்பர் அஜித் போல் நாமும் உடை அணியலாம் என கூறினார் அதற்கு அரங்கமே அதிர்ந்தது, தொகுப்பாளர்கள் பேசும்வரை அரங்கம் அதிர்ந்தது. இதை பார்த்த விஜய் ரசிகர்கள் மற்றும் தல ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள் வீடியோவை.

இதோ வீடியோ

Leave a Comment