இசை வெளியீட்டு விழாவிற்கே டீசரை வெளியிட்டு அதகலப்படுத்தும் சன் நிறுவனம்.! இதோ வெறித்தனமான வீடியோ.! உச்சகட்ட கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக படக்குழு அறிவித்தது, இந்த நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகின்ற 15ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் என அறிவித்துள்ளார்கள்.

இந்த ஆடியோ நிகழ்ச்சியை சன் தொலைக்காட்சி நிறுவனம் லைவ் ஆக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது, மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார், ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடதக்கது.

மாஸ்டர் படப்பிடிப்பு முடிந்தவுடன் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பு நடந்த நெய்வேலியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து சென்றதே சமூக வலைத்தளத்தில் வைரல் ஆனது. இந்த நிலையில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் குட்டி ஸ்டோரி சொல்லுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் இந்த முறை படப்பிடிப்பின்போது வருமான வரித்துறையினர் குறுக்கிட்டு விஜய்யின் படப்பிடிப்பை கெடுத்தார்கள் அதனால் இதுபற்றி இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா குறித்து டீசர் ஒன்றை சன் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த டீசர் மாசாக இருப்பதாகவும், இதைவிட ஆடியோ வெளியீட்டு விழா மாஸாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment