பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டம் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்த சன் பிக்சர் நிறுவனம்.!

நடிகர் விஜய் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும் நடித்துள்ளார்கள். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இருப்பதாக படக்குழு அறிவித்தது அதுமட்டுமில்லாமல் லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய், படப்பிடிப்பு நடந்த இடத்தில் மரக்கன்றுகளை நட்டு முன்னுதாரணமாக இருந்தார்கள்.

மாஸ்டர் படத்தில் இருந்து ஏதாவது அறிவிப்பு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்து இருந்தார்கள் இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை வருகின்ற ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி உலகம் முழுவதும் திரையில் திரையிட முடிவு செய்துள்ளது.

அதனால் தற்போது மாஸ்டர் படத்திலிருந்து டப்பிங் பணிகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது, ஏற்கனவே அனிருத் இசையில் விஜய் பாடிய குட்டி ஸ்டோரி பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது, இந்தநிலையில் இரண்டாவது பாடல் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டது.

தற்பொழுது இரண்டாவது பாடலுக்கான வேலை மிகவும் தீவிரமாக நடைபெற்று வருவதாக படத்தில் பணியாற்றும் கலைஞர்கள் கூறினார்கள். இந்த நிலையில் மார்ச் 15ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு படத்தின் இசை வெளியீட்டு விழா நேரலையாக ஒளிபரப்பப்படும் என சன் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து உள்ளது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் திரை பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் மட்டுமே கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது. மாஸ்டர் படப்பிடிப்பின்போது வருமான வரித்துறையினர் விஜய்யை சீண்டியதும், பாஜக நடத்திய போராட்டம் ஆகியவை குறித்து விஜய் இசை வெளியீட்டு விழா மேடையில் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட வரும் நிலையில் இசை வெளியீட்டு விழாவில் இதை பற்றி கண்டிப்பாக பேசுவார் என கூறுகிறார்கள் கோலிவுட் வட்டாரத்தில்.

Leave a Comment