என்ன வாத்தி இந்த விளையாட்டோட பெயராவது தெரியுமா.? வெளியானது மிரட்டல் சண்டையுடன் மாஸ்டர் புரோமோ வீடியோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருபவர் தளபதி விஜய் இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக இருக்கிறது.

இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், கௌரி கிஷன், சாந்தனு பாக்கியராஜ், சஞ்சீவ், ஆண்ட்ரியா என பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோவை கடந்த 6 நாட்களாக தினமும் ஒரு வீடியோவாக படக்குழு வெளியிட்டு வருகிறது, அந்த வீடியோ அனைத்தும் ரசிகர்களிடம் வைரல் ஆகி வருவது மட்டுமல்லாமல் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.

இந்தநிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் இன்றோடக்சன் காட்சி மற்றும் சில சண்டைக் காட்சிகளை மர்மநபர்கள் சமூகவலைதளத்தில் வெளியிட்டார்கள், அதை பார்த்த படக்குழு பதறிப்போய் அந்த வீடியோவை உடனடியாக நீக்கியது.

இந்தநிலையில் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது அந்த வீடியோவில் விஜய்யை சில ரவுடிகள் கிண்டல் செய்வது போல் அமைந்துள்ளது அதற்கு விஜய் தன்னுடைய அதிரடியால் பதில் கூறுகிறார்.

இதோ அந்த புரோமோ வீடியோ.

Leave a Comment