மாஸ்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் கம்மிங் ஒத்து..! சும்மா பெரட்டி விடு செதற விடு..!

mastar movie trailer release date : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் மாஸ்டர்.  இந்த மாஸ்டர் திரைப்படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார்.

இவ்வாறு பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் சிறப்பு தோற்றத்தில் வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தின் முழு படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் சமீபத்தில் டீசர் வெளியாகி சமூக வலைதளத்தை அலற விட்டு விட்டது.  மேலும் இந்த திரைப்படத்தின் டிரைலர் ஆனது சமீபத்தில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தை தியேட்டர்களில் வெளியிட தியேட்டர் ஓனர்கள் அனைவரும் கங்கணம் கட்டி கொண்டு அலைகிறார்கள்.  ஏனெனில் மாஸ்டர் திரைப்படம் நம் வெளியிட்டால்தான் தியேட்டரில் கூட்டம் குவியும் என்ற ஒரு கணக்கு தான் இதற்கு காரணம்.

தற்சமயம் மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் வருகின்ற கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் கிறிஸ்துமஸ் அன்று மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் ஆனது வெளிவரவில்லை என்றால் கண்டிப்பாக புத்தாண்டு அன்று வெளியாகும் என உறுதியாக கூறி உள்ளார்கள்.

vijay
vijay

Leave a Comment