பட்டாசுக்கும் பாலாபிஷேகத்துக்கும் கொடுங்கடா ஆர்டர்..! வெளியானது மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி..!

mastar movie release date: பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப்பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட திரைப்படம்தான் மாஸ்டர் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக தளபதி விஜய் நடித்துள்ளார். மேலும் விஜய்க்கு ஜோடியாக பிரபல நடிகை மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரம்மாண்டமாக உருவான இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திரங்களாக இருக்கும் ஆண்ட்ரியா, சாந்தனு,  விஜய் சேதுபதி ஆகியோர்கள் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முற்றிலுமாக முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீஸுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் தீபாவளி அன்று இந்த திரைப்படம் வெளிவரும் என நினைத்து ஏங்கி கொண்டு இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படம் OTTயில் வெளியாகப் போவதாக பல வதந்திகள் வெளியாகி உள்ளது ஆனால் இவை அனைத்தும் பொய்யான தகவல் என மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரியப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படம் எப்போது தான் வெளியாகும் என ஏங்கி கொண்டு இருந்த ரசிகர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒன்று வைரலாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது மாஸ்டர் திரைப்படமானது வருகின்ற பொங்கலை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி தியேட்டரில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

vijay
vijay

Leave a Comment