ஒரே மாவில் இல்ட்லியும் வடையும் போட்ட லோகேஷ் கனகராஜ்..! மாஸ்டர் பேட்ட இரண்டுமே ஒன்றுதான் என ஆதாரத்தை உடைத்த நெட்டிசன்..!

mastar movie copy to pettai: வெகுநாளாக கிடப்பில் கிடந்து சமீபத்தில் தான் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி உள்ளது. இவ்வாறு வெளிவந்த நமது மாஸ்டர் திரைப்படமானது ஓரளவு விமர்சனத்தை பெற்றாலும் தற்போது வசூலில் வெளுத்து வாங்கி வருகிறது.

அதுமட்டுமல்லாமல் தளபதி விஜய் இது போன்ற கதாபாத்திரத்தில் கொஞ்சம் வித்தியாசமாக நடித்ததன் காரணமாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் எளிதில் கவர்ந்து விட்டார்.  மேலும் இந்த திரைப்படம் இணையத்தில் வெளியாகாமல் திரையில் வெளியானது சினிமா துறைக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது.

பொதுவாக ஒரு மெக ஹிட் ஹீரோவின் திரைப்படம் வெளி வந்தாலே போதும் அந்த திரைப்படத்தில் இந்த காட்சிகள் அந்த திரைப்படத்தில் இருந்து எடுத்தவை என கூறுவது வழக்கம்தன். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த பேட்டை திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதியை விஜயுடன் மோத முடிவெடுத்ததில் இருந்தே பிரச்சனை தான்.

இவ்வாறு அவர்கள் கூறியது போல பேட்டை மற்றும் மாஸ்டர் திரைப்படங்களை ஒப்பிட்டு நெட்டிசன் சில பதிவுகளை பதிவேற்றம் செய்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால் ரஜினி பேட்டை திரைப்படத்தில் கல்லூரி வார்டனாக வருவார் அதேபோல் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் பேராசிரியராக பணியாற்றியுள்ளார். மேலும் முதலில் பேட்டை திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் பாபி சிம்ஹா.  அதேபோல மாஸ்டர் திரைப்படத்தில் சாந்தனு ஆரம்பத்தில் வில்லனாக இருந்தார்.

மேலும் இந்த இரண்டு திரைப்படங்களிலும்மே விஜய் சேதுபதிதான் வில்லன்.  மேலும் மாளவிகா மோகனன் பேட்டை திரைப்படத்தில் தனது கணவர் இறந்ததன் காரணமாக பழிவாங்க துடிப்பார் அதேபோல ஆண்ட்ரியா மாஸ்டர் திரைப்படத்தில் அவருடைய கணவர் இறந்ததன் காரணமாக பழிவாங்க துடிப்பார்.

மாஸ்டர் திரைப்படத்தில் சாந்தனு கௌரி கிஷன் காதல் ஜோடியாக இருந்தது போல பேட்டை திரைப்படத்திலும் ஒரு கல்லூரி காதல் ஜோடிகள் இருந்தன. மேலும் பேட்டை திரைப்படத்தில் குரு சோமசுந்தரம் கதாநாயகனின் பிளாஷ்பேக் தெரிந்தவர். அதேபோல மாஸ்டர் திரைப்படத்தில் காலேஜில் சேர்மனாக நாசர் நடித்திருப்பார்.

mastar-pettai
mastar-pettai

அதுமட்டுமில்லாமல் பேட்டை திரைப்படத்தில் ரஜினி தன்னுடைய பழைய பாடலின் பாடலைப் பாடிக்கொண்டு சண்டை போடுவார்.  அதேபோலவே மாஸ்டர் திரைப்படத்தில் டி ஆர் ராஜேந்திரன் பாடலை பாடிக்கொண்டு விஜய் சண்டை போடுவார் இவ்வாறு சமூக வலைத்தளத்தில் நெட்டிசன் ஒருவர் விவரித்து பேசியுள்ளார்.

mastar-pettai
mastar-pettai

Leave a Comment