யானை விலைக்கு போகும் பூனை..! மாஸ்டர் படத்தில் விஜய் வைத்திருக்கும் பூனையின் விலை இம்புட்டா..?

mastar movie cat rate: பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் மாஸ்டர் இந்த திரைப்படம் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி நல்ல வசூலை பெற்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் சுமாரான விமர்சனங்கள் வந்தாலும்.  வசூலில் வெளுத்துக்கட்டி வருகிறது.  அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கொஞ்சம் சொதப்பியதன் காரணமாக ரசிகர்கள் ஆழ்ந்த வருத்தத்தில் உள்ளனர்.

இதற்கு முக்கிய காரணமே இந்த திரைப்படத்தில் விஜய்க்கு நிகராக விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரம் ஆனது மிகவும் மாசாக இருந்ததுதான் காரணமே.  எது எப்படியோ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

பொதுவாக பிரபல நடிகர்கள் திரைப்படத்தில் உபயோகப்படுத்தும் பொருட்கள் மிக உயர்ந்த விலைக்குப் போகும் என்பது வழக்கம்தான். அதுமட்டுமில்லாமல் அந்த பொருட்களை ரசிகர்கள் மிக விரும்பி வாங்கி உபயோகப்படுத்துவது வழக்கம் தான்.

அந்த வகையில் தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தில் வைத்திருக்கும் பூனையின் விலை மிக வைரலாக பேசப்பட்டு வருகிறது அதாவது அவர் உபயோகித்த பூனை காட்டு பூனையோ நாட்டுபூனையோ கிடையாதாம் அந்த பூனை பெர்சியன் பூனை வகையை சேர்ந்த தான்.

மேலும் அந்த பூனையின் விலை 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை விலை போய்க் கொண்டிருக்கிறதாம் மேலும் அந்தப் பூனையின் குட்டிகள் 18 ஆயிரம் வரை பேரம் பேசப்பட்டு வருகிறதாம். இவ்வாறு வெளிவந்த தகவலானது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

mastar cat
mastar cat

Leave a Comment