பிரம்மாண்ட “பேங்க் செட்” – AK 61 படப்பிடிப்பு தளத்திலிருந்து கசிந்த புகைப்படம்.!

நடிகர் அஜித்குமார் அண்மைக்காலமாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஓடிக்கொண்டிருக்கிறார். இதனால் ரசிகர்கள் இவரது அடுத்தடுத்த படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர் அந்த வகையில் வலிமை படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் தனது 61 வது திரை படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

முதல் கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்த நிலையில் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு  தொடங்கப்பட இருக்கிறது. நடிகர் அஜித் தற்பொழுது சென்னையில் இருக்கிறார் வெகு விரைவிலேயே ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என சொல்லப்படுகிறது. ஏகே 61 படத்தில் அஜித் உடன் கைகோர்த்து மலையாள நடிகை மஞ்சு வாரியர், அஜய், வீரா, சமுத்திரகனி, யோகி பாபு, மகாநதி சங்கர், ஜான் கொக்கின் மற்றும் பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

படம் முழுக்க முழுக்க ஒரு பேங்க் ராபரியை மையமாக வைத்து ஹச் வினோத் இயக்கி வருகிறார் இந்த படம் நிச்சயம் ஒரு ஆக்சன் செண்டிமெண்ட் கலந்த படமாக இருக்கும் என தெரிய வருகிறது. இந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு ஆரம்பத்திலேயே அஜித் சுமார் 20 லிருந்து 25 கிலோ உடல் எடையை குறைத்து புதிய கெட்டப்பில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அஜித் இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஒன்று வயதான கதாபாத்திரம் மற்றொன்று இளமையான கதாபாத்திரம் முதல் கட்ட படப்பிடிப்பில் வயதான கதாபாத்திரத்தில் நடித்த அஜித் இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் இளமையாக நடிக்க உள்ளார் என சொல்லப்படுகிறது.

இப்படி இருக்கின்ற நிலையில் படக்குழு பேங்க் ராபரியை மையமாக வைத்து உருவாக்குவதால் பேங்க் போல ஒரு செட் போடப்பட்டு உள்ளது அதன் புகைப்படம் தற்பொழுது இணையதள பக்கத்தில் லீக் ஆகி வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும், கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகின்றனர்.

இதோ நீங்களே பாருங்கள்.

https://twitter.com/Billa2Harry/status/1551842227860566017?s=20&t=XqQmm93Ah2ZdTfN6Q66LlQ

Leave a Comment