சூர்யா 42 திரைப்படத்திலிருந்து வெளியான மாஸ் அப்டேட்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த திரைப்படம் முழு வரலாற்று திரைப்படமாக உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா அவர்கள் பத்து கெட்டப்பில் நடித்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

இதனை தொடர்ந்து இந்த படத்தின் படபிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சூர்யா 42 திரைப்படத்தின் அப்டேட்டை படக்குழு ஒரு வீடியோவை தற்போது இணையத்தில் வெளியிட்டிருக்கிறது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் சூர்யா அவர்கள் சிறுத்தை சிவா இயக்கும் சூர்யா 42 திரைப்படத்திற்கு முன்பு பாலாவின் இயக்கத்தில் உருவான வணக்கம் திரைப்படத்தில் நடித்து வந்தார். ஆனால் பாலாவிற்கும் சூர்யாவிற்கு இடையே சில கருத்து வேறுபாடு காரணமாக சூர்யா வணங்கான் திரைப்படத்திலிருந்து விலகிக் கொண்டார்.

அதன் பிறகு வெற்றிமாறன் உடன் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சூரிய 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடையும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த திரைப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து தற்போது ஒரு அப்டேட்டை படக்குழு வெளியிட்டிருக்கிறது அதாவது “வெற்றி மற்றும் வீரத்தின் இசை பிரமாண்டத்துடன் எதிரொலிக்கட்டும்” அந்த வகையில் “சூர்யா 42 படத்தின் ஆடியோ உரிமையை சரிகமசவுத்” வாங்கியுள்ளதாக பட குழு தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து சூர்யா 42 திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படம் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தக்கூடிய படமாக அமையும் என கூறப்படுகிறது. இனிவரும் காலங்களில் சூர்யா 32 திரைப்படத்தின் அப்டேட் வெளியாகிக் கொண்டே இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதோ அந்த வீடியோ…

Leave a Comment

Exit mobile version