சிம்புவின் பத்து தலை திரைப்படத்திலிருந்து வெளியான மாஸ் அப்டேட்.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு இவர் நடிப்பில் கடந்த சில வருடங்களாக வெளியாகும் பல திரைப்படங்கள் தோல்வியைத்தான் சந்தித்திருந்தது. அது மட்டுமல்லாமல் இனிமேல் இவர் அவ்வளவுதான் சினிமாவை விட்டு விலகப் போகிறார் என்று பல விமர்சனங்கள் இருந்த நிலையில் மீண்டும் இந்த விமர்சனங்களை அனைத்தையும் அடித்து நொறுக்கி தற்போது தமிழ் சினிமாவில் விட்ட இடத்தை பிடித்துக்கொண்டார் நடிகர் சிம்பு.

அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான கடந்த இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து வருகிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியான மாநாடு மற்றும் வெந்து தணிந்தது காடு இரண்டு படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது இதனை தொடர்ந்து அடுத்ததாக பத்து தல திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கு இடையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தற்போது பத்து தல திரைப்படத்தில் பிசியாக நடித்து வரும் நடிகர் சிம்பு அடுத்ததாக எந்த திரைப்படத்தில் நடிக்க போகிறார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படத்தின் ஒரு அப்டேட் வெளியாகியிருக்கிறது இதனால் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். இதுவரைக்கும் பத்து தல படத்தில் இருந்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்து வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியான உடனே ரசிகர்கள் மிகவும் குதூகலமாகிவிட்டார்கள்.

அதாவது பத்து தல படத்தின் முதல் சிங்கிள் பாடல் பிப்ரவரி 3ஆம் தேதி வெளியாக உள்ளதாகவும் மேலும் இது குறித்த ஒரு போஸ்டர் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பத்து தல திரைப்படம் வருகின்ற மார்ச் 30 ஆம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment