ஆரம்பிக்கலாமா.. பிக்பாஸ் சீசன் 7 குறித்து வெளியான மாஸ் அப்டேட்.! குஷியில் ரசிகர்கள்

சின்னத்திரையில் பிரபலமான தொலைக்காட்சி விஜய் டிவி தான்.. இந்த தொலைக்காட்சியில் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ்.. இந்த நிகழ்ச்சியை சீசன் சீசன்னாக உலகநாயகன் கமலஹாசன் சிறப்பாக நடத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வைரலானது..

இதுவரை 6 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில் பிக் பாஸ் 7 -வது சீசன்  வெகு விரைவிலேயே தொடங்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. பிக் பாஸ் 7 -வது சீசன் வருகின்ற ஜூலை மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

இதற்கான பணிகளில் தான் தற்பொழுது விஜய் டிவி களம் இறங்கி இப்பொழுதே போட்டியாளர்களை மும்பரமாக தேர்வு செய்து வருகிறது பிக் பாஸ் 7 வது சீசனில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது கடந்த சீசனில் பொதுமக்கள் என்ற அடையாளத்தோடு இரண்டு போட்டியாளர்கள் களமிறக்கப்பட்டனர்.

அவ்வாறு வந்த தனலட்சுமி, ஷவின் இருவருமே நல்ல வரவேற்பு கிடைத்ததால் பிக் பாஸ் சீசன் 7 -ல் பொதுமக்கள் என்ற அடையாளத்தோடு கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது இந்த சீசனும் மக்களை குஷிப்படுத்தும் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.. 7 வது சீசனில் விஜய் டிவியில் இருந்து எத்தனை பேர் வரப் போகிறார்கள்.

மாடல் அழகிகள் மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள், பொதுமக்கள் சார்பில் இறங்கும் போட்டியாளர்கள் என்பது வெகு விரைவிலேயே தெரிந்து விடும்.. இப்பவே பிக்பாஸ் 7 சீசன் எதிர்பார்ப்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் இந்த சீசனையும் உலகநாயகன் தொகுத்து வழங்கினால் இன்னமும் சீரும் சிறப்புமாக இருக்கும் என்பதே அனைவரும் எதிர்பாக இருக்கிறது.

Leave a Comment