சுத்தியை வைத்து மாஸ் காட்டும் அருண் விஜய் வெளியானது மிஷன் பட டீசர்.!

தமிழ் சினிமாவில் சாதாரண கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டு பின்பு குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து கதாநாயகனாக ஒரு சில திரைப்படங்களில் நடித்து மக்களிடையே மிகவும் புகழ் பெற்று விளங்கி வருபவர் தான் அருண் விஜய்.

இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பு தந்தது அதிலும் குறிப்பாக கூற வேண்டும் என்றால் இவர் யானை திரைப்படத்தில் நடித்துள்ள கதாபாத்திரம் மிகவும் ரசிகர்களுக்கு பிடித்து விட்டது என்று தான் கூற வேண்டும்.

அந்த வகையில் பார்த்தால் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து தற்பொழுது நிறைய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் இவர் அச்சம் என்பது இல்லையே மிஷன் சாப்டர்1 திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கியுள்ளார் மேலும் இந்தத் திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை எமி ஜாக்சன் நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.

குறிப்பாக தமிழ்,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு போன்ற பல மொழிகளில் லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியான நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது நேற்று அறிவித்தபடி டீசர் வெளிவந்து விட்டது.

மேலும் இந்த டீசரை பார்க்கும் பொழுது அருண் விஜய் மிகவும் பயங்கரமாக நடித்துள்ளார் என்று தான் கூற வேண்டும் அந்த அளவிற்கு படம் மிகவும் அற்புதமாக வந்துள்ளது.தொடர்ந்து இந்த டீசரை பார்த்த ரசிகர்கள் பலரும் அருண் விஜய் எங்கேயோ சென்றுவிட்டார் வேற லெவலில் நடித்துள்ளார் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Leave a Comment