ஆர் ஜே பாலாஜியின் அடுத்த படத்தில் இணைந்த மாஸ் ஹீரோ.! கதை சொல்லவே இரண்டு மாதம் எடுத்துக் கொள்கிறாராம்..

0
rj-balaji
rj-balaji

தமிழ் சினிமாவிற்கு காமெடி நடிகராக அறிமுகமாகி தற்பொழுது இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் ஆர்ஜே பாலாஜி. தன்னுடைய காமெடியின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்த ஆர்.ஜே.பாலாஜி தற்பொழுது அடுத்தடுத்து நல்ல கதை அம்சமுள்ள திரைப்படங்களை இயக்கி வருகிறார் மேலும் இவருடைய திரைப்படங்களில் நகைச்சுவை மட்டும் அல்லாமல் சமூகத்திற்கு நிறைய கருத்துக்களை கூறும் வகையில் அமைகிறது.

இதனை அடுத்து இந்த படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் இவரும் அந்த படத்தில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார். இவருடைய நடிப்பில் கடைசியாக வீட்டில் விசேஷம் என்ற திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது இந்த படத்தின் வெற்றியை கொண்டாடும் நேரத்தில் மாஸ் ஹீரோ ஒருவருக்கு பதவி சொன்னதாகவும் அந்த கதையை கேட்ட ஹீரோவுக்கு மிகவும் பிடித்த போக உடனே ஓகே சொன்னதாகவும் சொல்லி இருக்கிறார்.

அது வேறு யாரும் கிடையாது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தான். இவரை தான் ஆர்ஜே பாலாஜி விஜயிடம் நான் இதனை பிரஸ் மீட்டில் சொல்லலாமா என கேட்டிருக்கிறார் அதற்கு விஜயும் கண்டிப்பாக இதை நீங்கள் தெரிவிக்கலாம் என கூறி இருக்கிறார். மேலும் முதலில் இந்த படத்தின் கதையை தானே ஹீரோவாக வைத்து தான் எழுதி இருக்கிறார்.

அதன் பிறகு இந்த கதை விஜய்க்கு மட்டும் தான் செட்டாகும் என நினைத்து அவரிடம் போய் கதையைக் கூறி இருக்கிறார். இவ்வாறு ஆர்.ஜே.பாலாஜியின் படங்கள் பொதுவாக அரசியல் சம்பந்தப்பட்டதையும், ஏதாவது ஒருவரை மையமாக வைத்தும் தான் உருவாக்கி வருகிறார். அந்த வகையில் அவர்களுடைய கூட்டணியில் கண்டிப்பாக அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் இருப்பதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

இதனை அடுத்து கதையை முழுவதுமாக முடிப்பதற்கு விஜயிடம் டைம் கேட்டிருக்கும் நிலையில் விஜயிடம் கதை சொல்வதற்காக மட்டுமே இரண்டு மாதங்கள் தன்னை தயார் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஆர்.ஜே பாலாஜி. தற்போது ஆர்.கே பாலாஜி படத்திற்கான பட வேலைகளை எப்பொழுது தொடங்குவார் என ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகிறார்கள்.