35 வயதில் மூன்று திருமணம்.! ஐந்து வருடத்திற்கு ஒரு மாப்பிள்ளை அடுத்தடுத்து கல்யாணம் பண்ணும் குடும்ப குத்து விளக்கு

இன்றைய காலகட்டத்தில் முதல் திருமணம் பிடிக்கவில்லை என்றால் அவர்களை விவாகரத்து செய்துவிட்டு மறுமணம் செய்து கொள்வது வழக்கமாகிவிட்டது. அப்படி தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டு வாழும் பிரபலங்களை நாம் பார்த்திருப்போம் ஆனால் அன்றைய காலகட்டத்தில் மூன்று திருமணங்களை செய்து கொண்ட பிரபல நடிகை ஒருவர் இருக்கிறார் என்றால் ஆச்சரியமாக தான் இருக்கிறது.

ஆம் 70, 80களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளம் வந்தவர் நடிகை லட்சுமி இவர் பல திரைப்படங்களில் நடித்து உள்ளார். அதுமட்டுமல்லாமல் தான் நடிக்கும் திரைப்படங்களில் எந்த கதாபாத்திரமும் அந்த கதாபாத்திரத்தை உள்வாங்கி அந்த கேரக்டராகவே நடிப்பாராம். அப்படி இவர் நடித்து தனது திறமையால் எம்ஜிஆர் சிவாஜி உள்ளிட்ட பலருடன் ஜோடியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை லட்சுமி 1969 ஆம் ஆண்டு வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ஐந்து வருடங்கள் கழித்து தனது முதல் கணவரை விவாகரத்து செய்து விட்டார் அதன் பிறகு அடுத்த வருடத்திலேயே அதாவது 1975 ஆம் ஆண்டு பிரபல நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இரண்டாவது திருமணம் நிலைக்கவில்லை ஒரு சில பிரச்சனை காரணமாக 1980 ஆம் ஆண்டு இரண்டாவது கணவரையும் விவாகரத்து செய்துவிட்டார் அதன் பிறகு 1987 ஆம் ஆண்டு சந்திரசேகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்படி விவாகரத்து செய்து மூன்று திருமணம் செய்து கொண்ட லட்சுமியின் வாழ்க்கை பல விமர்சனங்களை சந்தித்துள்ளது அப்படி இருந்தும் தனது வாழ்க்கையை தனக்கு பிடித்தது போல் தைரியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் நடிகை லட்சுமி. இதனைத் தொடர்ந்து நடிகை லட்சுமி அவர்கள் திரைப்படங்களை தொடர்ந்து சீரியல்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment