அடக்கடவுளே தாலி கட்டிய கொஞ்ச நேரத்தில் மாப்பிள்ளைக்கு மணப்பெண் கொடுத்த ஷாக்.!

தாலி கட்டிய கொஞ்ச நேரத்தில் மணப்பெண் தனிமைப்படுத்தப்பட்டதால் மணமகன் சோகத்தில் மூழ்கினார், மணப்பெண்ணுக்கு கொரோனா தோற்று இருந்த நிலையில் அதனால் தனிமைப்படுத்த பட்டதால் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணப்பெண் வயது 26 தான், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார், இவருக்கும் திருப்பூரைச் சேர்ந்த இளைஞருக்கும் ஐந்து மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்டது, இந்த நிலையில் சேலம் மாவட்டம் கெங்கவல்லி இடத்தில் மே 24ஆம் தேதி திருமண தேதி குறிக்கப்பட்டது.

திருமணத்திற்காகக் கடந்த 21ஆம் தேதி பாஸ் பெற்ற சென்னையிலிருந்து மணப்பெண் கிளம்பியுள்ளார், ஊரடங்கு தற்போது அமலில் இருப்பதால் குறைந்த ஆட்களை வைத்து திருமணத்தை நடத்தி முடித்து விடலாம் என இருவீட்டாரும் முடிவு செய்தார்கள், அதனால் இருவீட்டாரும் கெங்கவல்லிக்கு வந்தனர்.

இந்த நிலையில் சேலம் முழுவதும் தீவிர கொரனோ தடுப்பு நடவடிக்கை கொண்டுவரப்பட்டுள்ளது, இந்த நிலையில் மாவட்டம் விட்டு மாவட்டம் ஊர்விட்டு ஊர் யார் வந்தாலும் அவர்களுக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டு வருகிறது, அந்த வகையில் இரண்டு வீட்டாரும் சேலம் வந்த பொழுது அவர்களுக்கு டெஸ்ட் எடுக்கப்பட்டது இரண்டு மாவட்டங்களை கடந்து போது கொரோனா இல்லை என ரிசல்ட் வந்தது ஆனால் தலைவாசல் வந்ததும் சோதனைச்சாவடியில் மணப்பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியது.

இந்த விஷயம் எப்படியோ சேலம் கலெக்டருக்கு சென்றது அதனால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை முடிப்பதற்கு கலெக்டரிடம் அனுமதி கேட்டார்கள் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியுடன் மிக சிம்பிளான முறையில் திருமணம் நடந்தது இந்தத் திருமணம் நடந்து முடிந்தவுடன் தாலி கட்டிய கொஞ்ச நேரத்திலேயே கல்யாண பெண்ணை தனிமை படுத்தினார்கள் அதுமட்டுமில்லாமல் வீட்டுக்கு வெளியே நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

மேலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் யாரும் வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தினார்கள், மேலும் மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தாரையும் தனிமை படுத்தினார்கள், திருமணம் நடைபெற்ற அந்த வீதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளார்கள்.

Leave a Comment