விஷாலை சுத்து போட்ட முன்னணி நடிகர்கள்.. “மார்க் ஆண்டனி” இதுவரை அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

Mark Antony : அன்பானவன் அடங்காதவன் அசராதவன், பஹீரா போன்ற படங்களை எடுத்த  ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி திரையில் வெளிவந்து வெற்றி நடை கண்டு வரும் திரைப்படம் மார்க் ஆண்டனி.. இந்த படத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் இணைந்து ரிது வர்மா, விஷ்ணு பிரியா, செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி..

சுனில் போன்ற பலர் நடித்து இருக்கின்றனர் இந்த படத்தில் விஷால் மற்றும் எஸ்ஜே சூர்யா இருவரும் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கின்றனர்.. அதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் சில்க் ரோலில் விஷ்ணுபிரியா நடித்து மறைந்த நடிகை சில்க்கை அப்படியே மீண்டும் திரைக்கு கொண்டு வந்துள்ளார்.

அது ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்தது.. மார்க் ஆண்டனி படம் வெளியாகி இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் இன்றும் திரையரங்கில் ஹவுஸ் ஃபுல்லாக இருந்து வருகின்றன.. இந்த படம் போட்ட பட்ஜெட்டை தாண்டி பல கோடி லாபம் பார்த்து வருகிறது 11 நாள் முடிவில் மார்க் ஆண்டனி படத்தின்  வசூல் 84 கோடிக்கும் மேல் செய்தது.

இதன் மூலம்  சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் வசூலை பிரேக் செய்து உள்ளது. இந்த நிலையில் இதுவரை மார்க் ஆண்டனி திரைப்படம் உலகம் முழுவதும் 87 கோடி வசூல் செய்திருக்கும் நிலையில் 100 கோடியை தொட்டு பாக்ஸ் ஆபிஸ் இடம் பிடிக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

ஏனென்றால் நாளை திரையில் சந்திரமுகி 2, இறைவன், சித்தா போன்ற பல படங்கள் வெளிவர இருக்கின்றன அதனால் மார்க் ஆண்டனி படத்தின் வசூல் 100 கோடியை தொட சிரமம் தான் பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..