மார்க் ஆண்டனி படத்தில் மிரட்டும் எஸ். ஜே. சூர்யா – வெளிவந்த புதிய போஸ்டர்..!

அண்மைக்காலமாக சினிமா உலகில் இருக்கும் ஹீரோக்கள் பலரும் வில்லன் ரோல்களில் நடித்து மிரட்டுகின்றனர் அந்த வகையில் விஜய் சேதுபதி ஹீரோ வில்லன் என மிரட்டி வருகிறார் அவரை தொடர்ந்து நடிகரும், இயக்குனருமான எஸ்.ஜே. சூர்யா சமீபகாலமாக வில்லன் ரோலில் தொடர்ந்து சூப்பராக நடித்து  வெற்றி மேல் வெற்றியை அள்ளி வருகிறார்.

அண்மையில் கூட இவர் சிவகார்த்திகேயனின் டான் படத்தில் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் அந்த வகையில் தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் RC 15 படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்து வருகிறார்.

தமிழில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்து வரும் திரைப்படம் மார்க்க ஆண்டனி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் ஹீரோயினாக ரித்து வர்மா நடிகர் இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லன் ரோலில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் விஷால் என இருவருமே இரட்டை வேடத்தில் நடிக்கின்றனர் இந்த படம் 1970 களில் நடப்பது போன்று தற்போதைய காலகட்டத்தில் உருவாகி வருகிறது அதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு தற்பொழுது அதிகரித்து உள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் மார்க் ஆண்டனி படத்திலிருந்து ஏற்கனவே..

விஷால் துப்பாக்கியை ஏந்திதிருக்கும் புகைப்படம் வைரலான நிலையில் தற்பொழுது மார்க் ஆண்டனி படக்குழு எஸ். ஜே. சூர்யாவின் போஸ்டரையும் வெளியிட்டு அதிர விட்டுடுள்ளது போஸ்டரில் துப்பாக்கியை பிடித்துக்கொண்டு சுடுவது போல இருக்கும் போஸ்டர் இணையதள வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்..

s.j. surya

Leave a Comment

Exit mobile version