சந்திரமுகி பேய் வந்தாலும் வசூலில் கெத்து காட்டிய மார்க் ஆண்டனி.! இதுவரை எவ்வளவு வசூல் தெரியுமா.?

Mark antony : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகிய திரைப்படம் மார்க் ஆண்டனி இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று பார்வையாளர்களை திரையரங்குக்கு கட்டி இழுத்தது.

மேலும் விஷாலின் திரை பயணத்தில் மார்க் ஆண்டனி திரைப்படம் மிக முக்கிய பங்கை வகித்து வருகிறது ஏனென்றால் விஷால் திரைப்படத்தில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற அந்தஸ்தில் மார்க் ஆண்டனி இருந்து வருகிறது இதற்கு காரணம் முழுக்க முழுக்க விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா என இருவரையும் கூறலாம்.

இந்தத் திரைப்படம் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என தகவல் கிடைத்துள்ளது. தற்பொழுது திரையரங்கில் சந்திரமுகி இரண்டாவது பாகமும், இறைவன் திரைப்படமும் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது சந்திரமுகி 2 திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கணா ரனாவத் லட்சுமிமேனன், மகிமா நம்பியார் ஆகியோர்கள் நடித்துள்ளார்கள்.

அதேபோல் இறைவன் திரைப்படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா ஆகியோர்கள் நடித்துள்ளார்கள் இந்த இரண்டு திரைப்படமும் திரையரங்கிற்கு வந்தாலும் மார்க் ஆண்டனி வசூலுக்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது.

மார்க் ஆண்டனி திரைப்படம் இதுவரை உலக அளவில் 101 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இரண்டு மிகப்பெரிய திரைப்படம் வந்தாலும் மார்க் ஆண்டனி திரைப்படத்திற்கு நல்ல வசூலே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.