Mark antony : விஷால் எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவாகிய மார்க் ஆண்டனி திரைப்படத்தின் நாலாவது நாள் வசூல் கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில், ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகிய திரைப்படம் தான் மார்க் ஆண்டனி இந்த திரைப்படத்தை அர்ஜுன் மற்றும் சபரி முத்து இணைந்து கதையை எழுதியுள்ளார்கள் அதேபோல் படத்திற்கு ஒளிப்பதிவாளராக அபிநந்தன் ராமானுஜம் ஒர்க் பண்ணியுள்ளார், விஜய் வேலு குட்டி எடிட்டராக பணியாற்றியுள்ளார் அதேபோல் வினோத்குமார் தனது மினி ஸ்டுடியோ பேனரில் படத்தை தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படம் டைம் டிராவல் பின்னணியில் அமைக்கப்பட்ட நகைச்சுவை கேங்ஸ்டர் அதிரடி திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்கிற்கு வந்தது விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்கள்.
படத்திற்கு முதல் நாளே பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்ததால் இன்று வரை திரையரங்கில் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது அது மட்டும் இல்லாமல் கடந்த மூன்று நாட்களாக விடுமுறை நாள் என்பதால் வசூலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நீண்ட நாள் வெற்றிக்காக காத்துக் கொண்டிருந்த விஷாலுக்கு மார்க் ஆண்டனி திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று கொடுக்கிறது.
இந்த நிலையில் முதல் வார பாக்ஸ் ஆபீஸில் மார்க் ஆண்டனி திரைப்படம் ஒவ்வொரு நாளும் என்ன வசூல் செய்துள்ளது என்பதை இங்கே காணலாம்.
முதல் நாள் 8.35 கோடியும், இரண்டாவது நாள் 9 கோடியும், மூன்றாவது நாள் 10.44 கோடியும் வசூல் செய்திருந்தது. இந்த நிலையில் நான்காவது நாள் 7.4 கோடி வசூல் செய்யும் என கருத்துக்கணிப்பு வெளியாகி உள்ளது மொத்தம் நான்கு நாள் முடிவில் 35 புள்ளி 19 கோடி மார்க் ஆண்டனி திரைப்படம் வசூல் செய்ய அதிக வாய்ப்பு என கூறப்படுகிறது.
மேலும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா, விஷால், ரிது வர்மா கே செல்வராகவன், சுனில், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா, நிழல்கள் ரவி, ஒய் ஜி மகேந்திரன், விஷ்ணுபிரியா காந்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.