பட்டி தொட்டி எங்கும் வசூல் வேட்டையாடும் விஷாலின் “மார்க் ஆண்டனி” 2 நாள் முடிவில் அள்ளிய கோடிகள் எவ்வளவு தெரியுமா.?

Mark Antony 2nd day collection : தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் விஷால் இவர் ஆரம்பத்தில் மலைக்கோட்டை, தாமிரபரணி, சண்டக்கோழி, திமிரு என அடுத்தடுத்த ஆக்சன் படங்களை கொடுத்து அசத்தினார். பெரிய அளவில் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட விஷால்..

அதன் பிறகு தொடர்ந்து சுமாரான படங்களை கொடுத்து வருகிறார் வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த விஷால் இளம் இயக்குனர் ஆதி ரவிச்சந்திரன் கூட்டணி அமைப்பை மார்க் ஆண்டனி படத்தில் நடித்தார். நடிகர் விஷாலுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, ரிது வர்மா, ஒய் ஜி மகேந்திரன், செல்வராகவன்..

அபிநயா, சுனில் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. படம் முழுக்க முழுக்க டைம்  டிராவல் படமாக இருந்தாலும் காமெடி, ஆக்சன் போன்றவை இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி பொதுமக்கள் மார்க் ஆண்டனி படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினர்.

தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்கள் வருவதால் வசூலிலும் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. முதல் நாளே பத்து கோடிக்கு மேல் வசூல் அள்ளிய நிலையில் இரண்டாவது நாளுக்கான வசூல் நிலவரம் தற்போது கிடைத்துள்ளது அதன்படி பார்க்கையில் மார்க் ஆண்டனி திரைப்படம் உலகம் முழுவதும் சுமார் 25 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

Mark Antony in Vishal
Mark Antony in Vishal

வருகின்ற நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் திரையரங்கில் கூட்டம் அலைமோதுவதோடு மட்டுமல்லாமல் வசூலிலும் ருத்ர தாண்டவம் ஆடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயம் ஒரு பெரிய வசூலை அள்ளி நிற்கும் மேலும்  நடிகர் விஷாலிடம் சரி, எஸ் ஜே சூர்யாவிற்கும் சரி மிகப்பெரிய வெற்றி படம் என்பது குறிப்பிடத்தக்கது.