வசூலில் உச்சம் தொட்ட “மார்க் ஆண்டனி”.. சிவகார்த்திகேயன் பட சாதனை முறியடிப்பு

Mark Antony 11 day collection : ஜெயிலர், ஜவான் படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் உருவான திரைப்படம் மார்க் ஆண்டனி. மேலும் படத்தில் ரிது வர்மா, சென்ராயன், செல்வராகவன், நிழல்கள் ரவி, சுனில் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர்.

கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் கோலாகலமாக வெளியானது படம் முழுக்க முழுக்க டைம் டிராவல் சம்பந்தப்பட்ட படமாக இருந்தாலும் ஆக்சன், காமெடி, எமோஷனல் என அனைத்தும் கலந்து இருந்ததால் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது..

இதனால் மார்க் ஆண்டனி படத்தின் வசூலும் அதிகரித்தது முதல் நாளே 10 கோடிக்கு மேல் வசூல் அள்ளியது அடுத்தடுத்த நாட்களிலும் குறை வைக்காததால் முதல் ஒரு வாரத்திலேயே 50 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இந்த நிலையில் மார்க் ஆண்டனி படம் வெளியாகி இத்துடன் 11 நாட்கள் ஆவதால் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி பார்க்கையில் மார்க் ஆண்டனி சுமார் 87 கோடிக்கு மேல் உலக அளவில் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. வெகு விரைவில் 100 கோடியை தொட்டு ஒரு புதிய சாதனையை நிகழ்த்த இருகிறது இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் பட சாதனையை மார்க் ஆண்டனி முறியடித்துள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

Maaveeran
Maaveeran

சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவான திரைப்படம் மாவீரன் படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக 80 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்த நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படம் அதனை 11 நாளில் 87 கோடி வசூல் செய்து முறியடித்துள்ளது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்