Marimuthu : 57 வயது மதிக்கத்தக்க மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் எதிர்நீச்சல் சீரியலில் பெண்களுக்கு எதிராக பெண்களை அடிமைத்தனம் பண்ணும் கதாபாத்திரத்தில் தான் மாரிமுத்து நடித்து வந்தார் இதனால் மக்கள் அவரை பலரும் திட்டி தீர்ப்பார்கள். சீரியலை பார்க்கும் பொழுது பல மக்கள் நீ கட்டையில போக வேண்டியது தானே என பலரும் திட்டுவார்கள். அப்படி மக்கள் திட்டியது போல் திடீரென மாரடைப்பால் எதிர்நீச்சல் சீரியல் பிரபலம் மாரிமுத்து அவர்கள் இறந்துள்ளார்.
சூட்டிங் டப்பிங் பணியை முடித்துவிட்டு சாலிகிராமத்தில் இருக்கும் வீட்டிற்கு மாரிமுத்து கிளம்பியுள்ளார், அப்படி போகும் வழியில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது அதனால் மூச்சு திணறி போகும் வழியிலேயே இறந்துள்ளதாக கூறப்படுகிறது. மாரிமுத்து சீரியலில் நடிப்பதற்கு முன்பே சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் ஆனால் இவருக்கு எதிர்நீச்சல் சீரியல் தான் மிகவும் பேரும் புகழையும் பெற்றுக் கொடுத்தது.
எதிர்நீச்சல் சீரியலை பார்த்த ரஜினி கூட மாரிமுத்துவை புகழ்ந்து பேசினார் அந்த அளவு இவரின் கதாபாத்திரம் மக்களால் ரசிக்கப்பட்டு வந்தது என்னதான் திட்டி தீர்த்தாலும் இவர் பேசும் வார்த்தைகள் மக்களை வெகுவாக கவர்ந்தது. ஏய் என்னமா என்று கூறும் பொழுது அட நம்ம மாரிமுத்து என்று கூறும் வகையில் இவர் புகழ்பெற்றிருந்தார்.

எதிர்நீச்சல் மாரிமுத்து இரண்டு திரைப்படங்களையும் இயக்கியுள்ளார். அந்த வகையில் கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால் ஆகிய திரைப்படங்கள் ஆகும். அதுமட்டுமில்லாமல் மாரிமுத்து கடைசியாக நடித்த ஜெய்லர் மற்றும் விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது.

மேலும் தற்பொழுது கமலஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. மாரிமுத்து சீரியலில் மட்டும் தான் வில்லன் ஆனால் நிஜத்தில் ஒரு உன்னதமான நல்ல மனிதர் என அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த நிலையில் இவர் இறந்த பிறகு ஸ்ட்ரக்சரில் மாரிமுத்துவின் பாடியை தூக்கிக் கொண்டு போகும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
https://twitter.com/mentalans/status/1700008808666525820?s=20