மாமன்னன் படத்திற்காக மாரி செல்வராஜ் எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தொடர்ந்து சமுதாயத்தில் முடங்கி கிடக்கும் மக்கள் விழித்து முன் வர வேண்டும் எனவே இதற்காக போராட வேண்டும் அப்படி போராடினால் என்ன பிரச்சனை எல்லாம் வரும் என்பதனை மையமாக வைத்து தொடர்ந்து படங்களை இயக்கி வருபவர் தான் மாரி செல்வராஜ்.
அந்த வகையில் பரியேறும் பெருமாள், கர்ணன் திரைப்படங்களை இயக்கி வரும் மாரி செல்வராஜ் தற்பொழுது மாமன்னன் படத்தினையும் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்திருக்கும் நிலையில் இவரை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு இடையே இந்த படம் கடந்த ஜூன் 29ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது.
இதுதான் உதயநிதியின் கடைசி படம் என்பதனால் ரசிகர்கள் மாமன்னன் படத்தினை பார்க்க திரையரங்குகளில் குவிந்து வருகிறார்கள். மேலும் இந்த படத்தினை பார்த்து விட்டு மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் மாரி செல்வராஜ் இந்த படத்தில் சமத்துவத்தை பேசி இருப்பதாகவும் புகழாரம் சூட்டி உள்ளார்கள். இதனை அடுத்து வடிவேலுவின் கதாபாத்திரம் மிகவும் அருமையாக இருப்பதாகவும் இதுவரையிலும் இல்லாத அளவிற்கு சீரியஸான கேரக்டரில் நடித்துள்ளார்.
அதேபோல் பகத் பாஸில் நடிப்பும் மிரட்டலாக அமைந்துள்ளது அந்த வகையில் இந்த படம் வெளியாகிய நான்கு நாள் முடிவில் இதுவரையிலும் 20 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. இவ்வாறு மாமன்னன் வெற்றியினை தொடர்ந்து மாரி செல்வராஜ் சார்பில் மினி கூப்பர் கார் ஒன்றை பரிசாக பெற்றுள்ளார்.
இவ்வாறு மாமன்னன் படத்தினை இயக்குவதற்காக இயக்குனர் மாரி செல்வராஜ் 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்று இருக்கிறாராம். இவ்வாறு மாமன்னன் படம் ஹிட்டாகி இருக்கும் நிலையில் இதனை அடுத்து இவருடைய சம்பளம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.