நானே எல்லாத்தையும் மாத்தி மறந்து மாறி வந்திருக்கன்.. இணையத்தில் பட்டையை கிளப்பும் விஷாலின் மார்க் ஆண்டனி டீசர்.!

தனது ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் நிறைய ஹிட் திரைப்படங்களை கொடுத்துவிட்டு தற்பொழுது நல்ல கதை அம்சம் கொண்ட திரைப்படங்கள் எதுவும் கிடைக்காததால் பொறுத்திருந்து ஒவ்வொரு திரைப்படமாக பார்த்து நடித்து வரும் நடிகர் தான் விஷால்.

இவருக்கு சினிமா துறையில் பல பிரச்சனைகள் வந்து கொண்டே தான் இருக்கிறது என்றாலும் அதையெல்லாம் கவனம் செலுத்தாமல் திரைப்படங்களில் நடிப்பதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் வெளியான லத்தி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று இவருக்கு ஒரு நல்ல புகழையும் பெற்று தந்தது மேலும் இவர் தற்பொழுது மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் டீசரை இன்று நடிகர் விஜய் இடம் காட்டி அவரிடம் வாழ்த்துக்களை பெற்ற விஷால் தற்பொழுது மார்க் ஆண்டனி டீசரை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். பல மொழிகளில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கிறார்கள் என்பது மட்டும் தெரிகிறது.

மேலும் இந்த டீசரை பார்க்கும் பொழுது ஒரு வித்தியாசமான கதைகளத்தில் உருவாகியுள்ள திரைப்படம் போல் தெரிகிறது இதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் நடிகர் விஷால் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிவிட்டால் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்ய வாய்ப்பிருக்கிறது என்றும் கூறி இந்த டீசரை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment