சினிமா உலகில் நம்பர் 1 இடத்தை பிடிக்க அஜித் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறார் இந்த நிலையில் அஜித்துடன் இணைந்து நடிக்க பல நடிகர் நடிகைகள் ஏங்குவது உண்டு. ஆனால் ஒரு சிலருக்கு அது நடக்கும் அந்த வகையில் அஜித்தின் தீவிர ரசிகரான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன். ஹச். வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்டபார்வை படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து ஷர்தா ஸ்ரீநாத், அபிராமி, வெங்கடாச்சலம், அர்ஜுன் சிதம்பரம், ரங்கராஜ் பாண்டே போன்ற பலர் நடித்திருந்தனர் அவர்களில் ஒருவராக ஆதிக் ரவிச்சந்திரனும் நடித்திருந்தார். இந்த படம் ஒரு ரீமிக்ஸ் திரைப்படம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் அஜித்திற்காக சற்று கதையை மாற்றி இந்த படத்தை மாபெரும் ஹிட் படமாக கொடுத்தார்.
இதில் நடித்தவர்களுக்கும் முக்கிய கதாபாத்திரம் அமைந்ததால் தற்போது அவர்களும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து பேசும் பொருளாக தற்பொழுது அமைந்துள்ளனர். இந்தப்படத்தில் ஷர்தா ஸ்ரீநாத் எப்படி அசாதாராண நடிப்பை வெளிப்படுத்தி நல்ல பெயரை பெற்றார். அதுபோல ஆதிக் ரவிச்சந்திரன்னும் சிறப்பாக நடிப்பு இருந்தது இந்த படத்தின் மூலமாக தான் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகராக அறிமுகமானார்.
அஜித்தின் தீவிர ரசிகரான இவர் அஜித்தை நேரில் சந்தித்தபோது சில அனுபவங்களை பல பேட்டியில் பல தடவை கூறிய நிலையில் தற்போதும் அஜித் குறித்து சிலவற்றை குறிப்பிட்டு உள்ளார். சமிபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது இயக்குனராக எப்படி இருந்தேன் நேர்கொண்ட பார்வை படத்திற்காக எப்படி மாறினேன் என்ற புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தார் இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
ஒரு சில ரசிகர்கள் விரைவில் நீங்கள் தல அவர்களை வைத்து ஒரு அற்புதமான கதையுடன் அஜித்தை சந்தியுங்கள் என்று கூறினார் மேலும் ஒருவர் அஜித்தை வைத்து நீங்கள் படம் இயக்க நான் காண விரும்புகிறேன் என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த ஆதிக் ரவிச்சந்திரன் நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பின் போது நான் என்னுடைய “காதலை தேடி நித்யானந்தா” மற்றும் “பஹீரா” இரண்டு படங்களின் கதையையும் எழுதி விட்டேன். அஜித்தை சந்தித்த பின் என்னுடைய எண்ண ஓட்டம் நிறைய மாறிவிட்டது இதன் பிறகு என்னுடைய கதை மற்றும் சினிமா தேர்வு சரியான தளத்தில் இருக்கும் என ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
During NerKondaPaarvai I almost completed both my on going films #kadhalaithedinithyanandha & #Bagheera my thought process has changed a lot after meeting sir.after this my choice of genres and films will be in a right space 🙂 https://t.co/k2cJmKYdnW
— Adhik (@Adhikravi) June 6, 2021
இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் “பஹீரா” மிக விரைவில் வெளியாக உள்ளது. இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன இந்த படத்தில் ஹீரோவாக பிரபுதேவா நடித்துள்ளார்.