மழைநீரால் தேங்கியுள்ள தண்ணீரில் ஜாலியாக பாட்டுப் பாடிக்கொண்டு படகு சவாரி செய்யும் மன்சூர் அலிகான்.! இவருக்கு மட்டும் எப்படி தான் இப்படி யோசிக்க தோணுது எனக் கேட்கும் ரசிகர்கள்.!

0
mansoor
mansoor

கடந்த சில நாட்களாகவே சென்னை மட்டுமல்லாமல் பல மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டே இருக்கிறது மழை பெய்வதை ரசிக்கும் நபர்கள் கூட எப்பொழுதுதான் மழை நிற்குமோ என புலம்பி வருகிறார்கள் புலம்புவதற்கு முக்கிய காரணம் மழை நீரால் நகர்ப்புறத்தில் இருக்கும் மக்களின் வீடுகளில் தண்ணீர் புகுந்து விடுகிறது.

இதனை போக்கும் வகையில் தமிழ்நாடு அரசும் பல உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்கள் இருந்தாலும் மழை இன்னும் விடாமல் பொழிவதால் பலரும் தங்களது இயல்பு வாழ்க்கையை வாழ சிரமப்படுகிறார்கள்.ஒரு சில சினிமா பிரபலங்கள் கூட மழை எப்பொழுது தான் விடுமோ என்று கவலைப்பட்டு வருகிறார்கள்.

ஏனென்றால் படப்பிடிப்பும் மழை காரணமாக நிறுத்தி வைக்கப்படுகிறது மேலும் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் மன்சூர் அலிகான் இவர் அந்தக் காலத்தில் வில்லன் மற்றும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்று விளங்கினார்.

இவரது நடிப்பில் வெளியாகும் பல திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மற்றும் மக்கள் நல்ல வரவேற்பு தந்து வந்தார்கள் மேலும் இவரது நடிப்பில் தற்போது எந்த திரைப்படமும் வெளியாகவில்லை என்றாலும் ஒரு சில திரைப்படங்களில் இவர் ரவுடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பொதுவாகவே மன்சூர் அலிகான் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே காமெடி கலந்த திரைப்படமாக தான் இருக்கும்.

இதனைத் தொடர்ந்து இவரது வீட்டின் முன்பு தண்ணீர் தேங்கி உள்ளதால் இவர் ஒரு குட்டி படகு ஒன்றில் சவாரி செய்துவரும் வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இவர் ஜாலியாக அந்த காலத்துப் பாடல்களை பாடிக்கொண்டே இவர் சவாரி செய்து வருகிறார் அப்போது எடுத்த வீடியோ காணொளி இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.