சற்றும் எதிர்பார்க்காமல் மறைந்த மனோபாலாவின் மனைவி செய்த செயல்.! குவியும் பாராட்டுக்கள்..

தமிழ் சினிமாவில் நல்ல குணமும் நல்ல உதவி செய்யும் மனப்பான்மையும் கொண்டவர் நடிகர் மனோபாலா இவர் நடிகர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் வலம் வந்தவர். மனோபாலா என்றவுடன் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவருடைய உடல் அமைப்பு தான்.

மிகவும் ஒல்லியான தோற்றத்தில் இருக்கும் மனோபாலா இதை வைத்து பல காமெடிகள் வெளியாகி உள்ளது அந்த காமெடி காட்சியில் மனோ பாலாவும் ரசித்து ரசித்து நடித்து தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த மனோபாலா கடைசியாக லோகேஷ் கனகராஜ் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்திலும் நடித்து வந்தார்.

இந்த நேரத்தில் கடந்த மே மூன்றாம் தேதி உடல் நலத் குறைவால் திடீரென உயிரிழந்தார் இவரின் இழப்பு சினிமா பிரபலங்கள் இடையே மட்டுமில்லாமல் ரசிகர்களிடையேவும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த நிலையில் இவரின் மறைவுக்கு பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள் அதுமட்டுமில்லாமல் பல பிரபலங்கள் மனோபாலாவின் அதிர்ச்சியை தாங்க முடியாமல் தங்களுடைய கருத்தை தெரிவித்து வந்தார்கள்.

மனோபாலா மறைந்து பின்பு இறுதி சடங்கும் முடிந்தது பொதுவாக ஒரு சமுதாயத்தில் யாராவது இறந்துவிட்டால் அவர்களின் உடைமைகளை எரிப்பது வழக்கம் ஆனால் மனோபாலாவின் மனைவி மனோபாலா இறந்த பிறகு அவருடைய வாட்சை மட்டும் வைத்துக்கொண்டு மற்ற எல்லா துணி மற்றும் பொருட்களை அனைத்தையும் அனாதை இல்லத்திற்கு கொடுத்துள்ளார்.

இவரின் இந்த செயல்அனைவரையும் நெகிழ வைத்துள்ளது அது மட்டும் இல்லாமல் மனோபாலா தான் உயிரோடும் இருந்த வரை மற்றவர்களுக்கு உதவி செய்தார் ஆனால் அவர் மறைந்த பிறகும் அவருடைய உடைமைகள் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என நல்ல எண்ணத்தில் அவரின் மனைவி இவ்வாறு செய்துள்ளது பெரும் பாராட்டுக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

Leave a Comment